என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மூங்கில் ரைஸ் வெஜிடபிள் சூப்
நீங்கள் தேடியது "மூங்கில் ரைஸ் வெஜிடபிள் சூப்"
மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று மூங்கில் அரிசியுடன் காய்கறிகள் சேர்த்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மூங்கில் ரைஸ் (‘காதி கிராஃப்ட்’டில் கிடைக்கும்) - ஒரு கப்,
கேரட் - ஒன்று ,
வேக வைத்த பட்டாணி - ஒரு கப்,
பீன்ஸ் - 5,
வெங்காயம் - ஒன்று,
பூண்டு - 2 பல்,
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி அளவு,
செய்முறை :
பூண்டு, வெங்காயம், கொத்தமல்லி, பீன்ஸ், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூங்கில் அரிசியில் கல் இருந்தால் நீக்கிவிட்டு, கழுவி 15 நிமிடம் ஊற வைத்து சாதம் சமைப்பது போல் சமைக்கவும். (குக்கரில் போட வேண்டாம்). வடிகஞ்சியையும் உபயோகிக்கவும்.
கடாயில் வெண்ணெய் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் வேக வைத்த பட்டாணியும் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் உப்பு, மிளகுதூள், வடித்த கஞ்சியை சேர்த்து மேலும் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட்டு, காய்கறி பாதி வெந்தவுடன் மூங்கில் அரிசியை சேர்த்து, கொதி வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இறக்கி பரிமாறவும்.

மிளகுத்தூள், உப்பு - தேவையான அளவு,

சத்தான மூங்கில் ரைஸ் வெஜிடபிள் சூப் ரெடி.
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
×

X